இதே போல் அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த், குருமூர்த்தி, பரணி ஆகிய மூன்று பேர் அந்த பாருக்கு மது அருந்த வந்தனர். அப்போது செல்வராஜ் மற்றும் பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் மது குடித்துக் கொண்டிருந்த மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் மோதலாக உருவாகி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் பீர் பாட்டிலால் செல்வராஜை தாக்கினர். இதில் செல்வராஜின் மண்டை உடைந்து, பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை திருவரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் பிரசாந்தை ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய குருமூர்த்தி, பரணி ஆகிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.