திருச்சியில் 21 வழக்கில் தொடர்புடைய ரவுடி மீது குண்டாஸ்

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் இவர் மீது திருச்சி மாவட்டத்தின் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் 21 மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

இந்நிலையில் வழிப்பறி திருட்டு என பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த மணிகண்டன் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி. செல்வநாகரத்தினம் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாருக்கு பரிந்துரை செய்தார். எஸ்பி-யின் பரிந்துரையை ஏற்ற மாவட்ட கலெக்டர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதை அடுத்து எஸ்.பி உத்தரவின் பேரில் போலீசார் மணிகண்டன் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி