திருச்சியை அடுத்த குமாரவயலூர் முருகன் கோவிலில் மாற்றுத்திறனாளிக்கு கட்டணமில்லா திருமண திட்டத்தின் கீழ் இந்து அறநிலையத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிக்கு இலவச திருமணம் நடைபெற்றது. கோவில் நிர்வாகம் சார்பில் தாலிக்கு 4 கிராம் தங்கமும், மணமக்களுக்கு பட்டு ஆடைகளும் மற்றும் கோவில் பிரசாதமும் வழங்கப்பட்டன. இதில் மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கோவில் செயல் அலுவலர் அருண்பாண்டியன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ், நாச்சிக்குறிச்சி சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.