ஸ்ரீரங்கத்தில் சித்திரை தோ் திருவிழா கொடியேற்றம்

ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்ட விழாவையொட்டி புதன்கிழமை காலை தங்கக் கொடி மரத்தில் கருட படம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. வேதமந்திரங்கள் முழங்க காலை 3.30 முதல் 4.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் கொடியேற்ற மண்டபத்தில் எழுந்தருளினார். 11 நாட்கள் நடைபெறும் இந்த விழா வரும் மே 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் தேரோட்டம் வரும் மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி