மணப்பாறை பகுதியில் வறண்ட வானிலை மற்றும் பூச்சி நோய் தாக்குதலால் பயிர் மகசூல் குறைந்து விவசாயிகள் நஷ்டத்தை தவிர்க்க பயிர் காப்பீடு செய்வது அவசியம் என திருச்சி வேளாண்மை உதவி இயக்குனர் மோகனா தெரிவித்துள்ளார். சம்பா நெல், மக்காச்சோளம், பருத்தி பயிர்களுக்கு ஏக்கருக்கு முறையே 578, 480, 594 ரூபாய் பிரீமியத் தொகையை தேசிய மயமாக்கப்பட்ட அரசு பொது சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.