அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் 4 ஆம் தேதி மீண்டும் நடத்துவது என இரு தரப்பிலும் தீர்மானிக்கப்பட்டது, பேச்சுவார்த்தை முடிந்து சென்ற விவசாய சங்க தலைவர்களை காவல்துறை வழியிலேயே மறித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதனை கண்டித்தும், கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க கோரியும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை திருச்சி அந்தநல்லூர் அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது அந்த வழியாக வந்த ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர்.
சிறுமியை காட்டுக்கு அழைத்து பாலியல் சீண்டல்