திருச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மார்ச் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருச்சி மாவட்டத்தில் மார்ச் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை சம்பந்தப்பட்ட கடனுதவிகள் மற்றும் விவசாயம் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் குறித்து நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம். மேலும் விவசாய பெருங்குடி மக்கள் இவ்வாய்ப்பினை நல்முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.