ஸ்ரீரங்கம்: வீட்டில் இருந்து வெளியே சென்ற எலக்ட்ரீசியன் மாயம்

திருவரங்கம் கீழவாசல் கீறக்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 31) இவர் திருவரங்கம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். 

இவருக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் ( டிசம்பர் 30) வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி விஷ்ணுவர்தினி திருவரங்கம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி