திருச்சி: மரக்கிளையில் பனியன் சிக்கி எலக்ட்ரீசியன் பலி

திருவரம்பூர் அருகே உள்ள கும்பக்குடி ராஜ்குமார் நகரை சேர்ந்தவர் சாம்சன் வயது 63 எலெக்ட்ரீஷியன் ஆக பணிபுரிந்து வருகிறார். நேற்று தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் ஏறிய போது சறுக்கி விழுந்தார். அப்போது அவர் அணிந்திருந்த பனியன் மரத்தின் கிளையில் சிக்கிக்கொண்டது. இதில் சாம்சன் கழுத்து இறுக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் சாம்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி