திருச்சி உய்யகொண்டான் பகுதியில் கள்ளச் சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக அரியமங்கலம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், கணபதி நகர் அருகே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்த பொன்மலை குமரன் தெருவைச் சேர்ந்த சரஸ்வதி என்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 32 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.