திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உணவு தேடி சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புள்ளிமானின் உடலை மீட்டு, மருத்துவர்கள் மூலம் உடற்கூராய்வு செய்து அலுவலக வளாகத்தில் புதைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.