ஒன்றிய அரசு ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கி அரசியல் செய்துள்ளதை கண்டித்து, தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் விதமாக செயல்படுவதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணி, மாணவரணி, தொண்டரணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட நிர்வாகிகள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்பாட்டத்தில் மாநகர செயலாளரும் மாநகர மேயருமான அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மண்டலக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.