திருச்சி: கிராமத்தில் பிடிபட்ட முதலை

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள எட்டரை கோப்பு கிராமத்தில் வயல்வெளியில் முதலை ஒன்று சுற்றித் திரிவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் சுமார் 8 அடி நீளம் கொண்ட முதலையை பத்திரமாகப் பிடித்தனர். பின்னர், அந்த முதலையை முக்கொம்பு காவிரி கொள்ளிடம் ஆற்றில் அதன் வசிப்பிடத்திற்கு கொண்டு சென்று விட்டனர்.

தொடர்புடைய செய்தி