திருச்சி மாவட்டம், முசிறி அருகே திருச்சி முதல் சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் வெள்ளூர் பேருந்து நிலையம் பகுதியில் அரியனாம்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர் மாறன் (23) என்பவர் திருச்சி தனியார் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன் மோதியதில் பலத்த ரத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த முசிறி காவல் ஆய்வாளர் செல்லத்துரை சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்கு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார், இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.