இந்த நிலையில் மே 29 அன்று சீனிவாசன் அதே பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் சர்மா மற்றும் சந்தானம் ஆகியோருடன் முரளி கிருஷ்ணன் வீட்டுக்கு சென்றார். அங்கு முரளி கிருஷ்ணனையும் அவரது மனைவியையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி, அவர் வீட்டின் கதவை உடைத்து தாழ்ப்பாளால் முரளி கிருஷ்ணனை தாக்கினார். இதில் முரளி கிருஷ்ணன் மண்டை உடைந்தது.
இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து முரளி கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.