திருச்சி: சரமாரியாக தாக்கிக்கொண்ட பேருந்து ஓட்டுநர்கள்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளி முன்பு, இரண்டு தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு வந்தபோது, ஒரு பேருந்து கார் மீது உரசியது. இதனால் ஓட்டுநர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி