மக்களின் உயிர் மீது அக்கறை இல்லாமல் சுத்தமான குடிநீர் வழங்க கூட முடியாத திமுக அரசையும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் பதவி விலக வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்றைய தினம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார் சங்கினை பறித்து பாஜகவினரை அப்புறப்படுத்தி கைது செய்ய முற்பட்டதால், ஆத்திரமடைந்த பாஜகவினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் அப்போது போலீஸா இருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.