திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், திமுக ஆட்சியின் ஐந்து ஆண்டு கால இன்னல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், "விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி" என்ற தலைப்பில் AIADMK Connect செயலி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில், இந்த நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகிகள் வீடுவீடாகச் சென்று கையடக்க பிரிண்டர்கள் மூலம் திமுக ஆட்சியின் காலத்தையும் ஒப்பிட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர்.