முசிறி அருகே ஊருடையாபட்டியைச் சேர்ந்த குணசேகரன், காருகுடி கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ், மதிவாணன் ஆகியோருடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், நேற்று (நவம்பர் 17) இரவு ஹரிஷ் அரிவாளால் தாக்கியதில் குணசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக தா. பேட்டை போலீசார் ஹரிஷ், மதிவாணன் மீது வழக்குப்பதிந்து அவர்களைத் தேடி வருகின்றனர்.