இதையடுத்து தில்லை நகர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்றதாக ராம்ஜி நகர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கோபிநாதன் மனைவி கோமதி (வயது 55), ராம்ஜி நகர் காந்தி நகரை சேர்ந்த சதீஷ் (வயது 42), திருச்சி மேல சிந்தாமணியை சேர்ந்த அப்துல் யூனுஸ் (வயது 22) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கோபிநாதன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இவர்களிடமிருந்து ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் ரூ. 5,200 பணம், செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை தில்லை நகர் காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.