திருச்சியில் ரூ.5 லட்சம்... நல்ல வாய்ப்பு

மத்திய, மாநில அரசு இணைந்து வழங்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான PM-JAY ஏழை, எளிய மக்களுக்காக தொடங்கப்பட்ட ஒரு முன்னோடித் திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ் பயனாளி ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்துக்கொள்ளலாம். ஆம்புலன்ஸ் முதல் ஆபரேஷன் வரை இத்திட்டத்தின்கீழ் இலவசமாகப் பயன்பெறலாம். குறிப்பாக இத்திட்டத்தின்கீழ் 70 வயதைக் கடந்த முதியவர்கள் யார் வேண்டுமானாலும் இணையலாம். இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீர்கள். இத்திட்டத்தின் முக்கிய அம்சம்: அவசர மருத்துவச் சேவைக்கு எங்கும் அலைய தேவையில்லை. PM-JAY அட்டை வைத்திருந்தாலே போதும். இத்திட்டத்தில் இணைய Ayushman App-ஐ பதிவிறக்கம் செய்து, அதில் தகுதியுடையோர் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதை தங்களுக்குத் தெரிந்தவர்களுக்குப் பகிரலாம்!

தொடர்புடைய செய்தி