திருச்சி சோமரசம்பேட்டை அடுத்த புங்கனூரைச் சேர்ந்த பனையடியான், தனது தங்கை அபிராமிக்கும் அவரது கணவர் சுரேஷுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் தலையிட்டார். தங்கைக்கு ஆதரவாகப் பேசியதால் ஆத்திரமடைந்த சுரேஷ், கத்தியால் பனையடியானைக் குத்திக் கொலை செய்தார். தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் கொலை செய்த சுரேஷைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.