திருச்சி தென்னூர் காவல்கார தெருவை சேர்ந்தவர் ஜான் போஸ்கோ மகன் நிம்மல் ஜோஷி இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று பைக்கில் தென்னூர் உழவர் சந்தையில் இருந்து கோர்ட் சாலை வழியாக எம்ஜிஆர் சிலை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த இவரது பைக் தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு கட்டையில் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட நிம்மல் ஜோஷிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.