திருச்சி அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி

திருச்சி எட்டரை கிராமத்தில் உள்ள நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் மகள் கிரிஜா வயது 19. சம்பவம் நடந்த நேற்று தனது வீட்டின் அருகில் உள்ள மின்கம்பத்தில் சாய்ந்து கொண்டு மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். 

அப்போது மின்கம்பத்திலிருந்து மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி கிரிஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவர் தந்தை அளித்த புகாரின் பேரில் கிரிஜாவின் உடலை கைப்பற்றிய சோமரசம்பேட்டை போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி