திருச்சி விமான நிலையத்தில் வைகோ பேட்டி

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளதாகவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றத்திற்கு கொண்டு வரும் வகையில் அறிவிப்புகள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்தார். பெண்களின் மொத்த ஆதரவை ஒரே அறிவிப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெற்றுவிட்டதாகவும், தேர்தல் போட்டியில் முதலமைச்சர் வெற்றி பெற்றுவிட்டதாகவும் அவர் கூறினார். தமிழ்நாட்டின் கடனை சமாளிக்க முதலமைச்சர் திட்டம் வகுத்து அதில் வெற்றியும் காண்பார் என்றும் வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி