திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் உள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் திருக்கோயிலில் வைகாசி மாத சிறப்பு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பிறகு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.