திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர் சந்துரு தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். அப்போது தாரநல்லூர் தேவர் பூங்கா அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த எஸ். வீரமணி (25) என்பவரைப் பிடித்து விசாரித்ததில், அவர் போதை மாத்திரைகள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து போதை மாத்திரைகள், சலைன் பாட்டில் மற்றும் போதை ஊசிகளை பறிமுதல் செய்தனர்.