திருச்சி: டூவீலரில் கஞ்சா கடத்தல் சிறுவன் உட்பட இருவர் கைது

திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மணல் வாரி துறை சாலை அருகே சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சங்கிலியாண்டபுரம் மறைமலை அடிகள் தெருவைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை நிறுத்தி சோதனை செய்ததில், அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீசார் சௌந்தர்ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுவனை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி