திருச்சி: கடன் தொல்லை; டீ மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி பாலக்கரை மாமுண்டி சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 43) இவர் உத்தமர் சீலி பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ராஜசேகர் நிறைய கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடன்காரர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளானார். 

இதையடுத்து நேற்று (ஜூன் 13) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையை தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி