திருச்சி: வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ₹4 லட்சம் மோசடி

பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை தொண்டப்பாடியைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் (54) என்பவரிடம், திருவெறும்பூர் அருகே நொச்சிவயல் புதூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (45) என்பவர் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி ரூ. 4 லட்சத்தை வாங்கியுள்ளார். ஆனால், அவர் வெளிநாட்டுக்கு அனுப்பாமல் பணத்தையும் திருப்பித் தராமல், மாயகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி