மாநகரில் நான்கைந்து இடங்களில் அந்த நபர் கைவரிசை காட்டி உள்ளார். அதைத்தொடர்ந்து கண்டோன்மெண்ட் காவல் நிலைய காவல்துறை அதிகாரிகள் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நபர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு, மனைவி குழந்தையுடன் கருமண்டபம் பகுதியில் தங்கி இருந்து பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார். கைதானவர் மதுரையைச் சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்துள்ளது. இன்று முழு விபரங்களையும் போலீசார் தெரிவித்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர்.
நாடாளுமன்றம் 2 மணி வரை ஒத்திவைப்பு