திருச்சி துவாக்குடி வடக்கு மலை விஓசி நகர் பகுதியில் சேர்ந்தவர் அழகேசன் திருச்சி ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்த அழகேசன் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட அவரது தாய் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற துவாக்குடி போலீசார் அழகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.