திருச்சி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரம்

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் இரண்டு கார்கள் வெடித்து சிதறியதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். மேலும், சென்னை காரைக்குடி அதிவிரைவு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன.

தொடர்புடைய செய்தி