திருச்சி: எம்ஜிஆரின் சொத்துக்கு உரிமை கோரும் வாரிசுகள்

திருச்சி உறையூரில் எம்ஜிஆர் தனது பெயரில் வாங்கிய தற்போது ரூ. 25 கோடி மதிப்புள்ள சொத்துக்கு உரிமை கோரும் அண்ணன் மகன்கள் கலெக்டரிடம் இன்று புகார் மனு திருச்சி வடக்கு காட்டூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ். ஓய்வு பெற்ற சர்வேயர் இவர் இன்று திருச்சி கலெக்டர் பிரதீப் குமாரிடம் ஒரு புகார் மனு அளித்தார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது: உறையூர் பகுதியில் மறைந்த தமிழக முதலமைச்சர் எம்ஜிஆருக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் காலியிடம் 80,000 சதுர அடி பரப்பளவில் உள்ளது. இதனுடைய இன்றைய சந்தை மதிப்பு ரூ. 25 கோடி இருக்கும். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அவரது அண்ணன் எம்.ஜி. சக்கரபாணி மகள் மற்றும் மகன்கள் வாரிசுகளாக பதிவு செய்து, அவர்களது பெயரில் பட்டா பதிவு செய்யப்பட்டது. பின்னர் வாரிசுகளின் பெயர்கள் நீக்கப்பட்டு அதிமுக பொதுச் செயலாளர் என பதியப்பட்டது. அதன்பின்னர் அந்தப் பெயரும் நீக்கம் செய்யப்பட்டு ஒரு தனி நபரின் பெயரில் கணினி நிலப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது. 

அதேசமயம் எம்ஜிஆர் தனது பெயரில் கிரயம் பெற்ற பத்திர நகலினை இத்துடன் இணைத்துள்ளேன். ஆகவே வறுமையில் வாடும் எம்ஜிஆரின் வாரிசுகள் பெயர்களை நிலப்பதிவேட்டில் பதிய உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி