திருச்சி: சுமை தூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள வாணிப கழக மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சங்க அங்கீகார தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், வருகை பதிவேட்டில் பெயர் இல்லாத தொழிலாளர்களின் பெயர்களை சேர்க்க வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு முன்தேதியிட்டு பச்சை அட்டை வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி