திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழமூலங்குடி பகுதியை சேர்ந்தவர் தியாகு என்கிற பெரியண்ணன் கட்டுமான தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பாக கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தபோது கீழே விழுந்து வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. அதற்கு தொடர் சிகிச்சை எடுத்தும் வயிற்று வலி குணமாகாததால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது சகோதரர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற ஜீயபுரம் போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.