திருச்சி மாவட்டத்தில் அமமுக வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு மாவட்ட செயலாளர்களுடன் இயங்கி வந்த நிலையில், தற்போது வடக்கு, தெற்கு, மத்திய மற்றும் மேற்கு என நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளர்களை கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார். புதிய மாவட்ட செயலாளர்களுக்கு கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.