தொட்டியம் அனலாடீஸ்வரர் ஆலய திருத்தேர் விழா

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் சிவாலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைகாசி விசாக திருத்தேர் பெருந்திருவிழா கடந்த 31ஆம் தேதி தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை நடந்தது. விழாவை முன்னிட்டு மூலவர் திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் சுவாமிகளுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு பூஜைகளை தொடர்ந்து சோமாஸ்கந்தர், அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர். அதனைத்தொடர்ந்து பக்தர்கள், சிவனடியார்கள் கைலாய பஞ்ச வாத்தியங்கள் வாசித்தவாறு ஓம் சிவாய நம என சிவ மந்திரங்கள் ஒலிக்க திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 

அப்போது பெண்கள் கும்மியடி, கோலாட்டம் ஆடி மகிழ்ந்தனர். பக்தர்கள் சுவாமிக்கு மாலை சாற்றியும், தேங்காய், பழம் படைத்தும் வழிபட்டனர். கோயில் வெளி பிரகார உலா சுற்றி வந்த திருத்தேர் பின்னர் நிலையை அடைந்தது.

தொடர்புடைய செய்தி