மதுரகாளியம்மன் ஓலைப்பிடாரி அம்மன் இரட்டை தலை அலங்காரத்தில் கோட்டைமேடு, சந்தைப்பேட்டை, புதூர், வளையல், காரவீதி, பண்டாரதெரு, தெற்கு அரங்கூர் உள்ளிட்ட 18 பட்டி கிராம மக்கள் ஊர்வலமாக மேளதாளத்துடன் பூத்தட்டு எடுத்து வந்தனர்.
மதுரகாளியம்மன் 32 அடியிலும், ஓலைப்பிடாரி அம்மன் 30 அடி தேரிலும் பக்தர்கள் பொதுமக்கள் தலையிலும் தோளிலும் சுமந்து 18 பட்டி சுற்றி வருவதால் திருவிழாவைக் காண திருச்சி, கரூர், நாமக்கல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 50,000 மேற்பட்ட பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொள்வதால் திருச்சி மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம், முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார், தொட்டியம் ஆய்வாளர் ஞானசேகர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அணியில் ஈடுபட்டிருந்தனர்.