திருச்சி கல்லணையில் இருந்து காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி குருவை சாகுபடிக்காக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேற்று (ஜூன் 15) நடைபெற்ற நிகழ்வில் தண்ணீரை திறந்து வைத்து நெல்மணிகளை தூவி காவிரி நீரை வரவேற்றார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி மெய்யநாதன் கோவை செழியன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி ஆர் பாலு கல்யாணசுந்தரம் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.