தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் டெல்டா மண்டல மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் அக்கட்சி தலைவர் ஜி. கே. வாசன் தலைமையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளருக்கு பேட்டி அளித்த ஜி கே வாசன், தமிழக அரசின் பட்ஜெட்டால் பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும், தேமுதிகவின் கூட்டணி முடிவு தமிழக வாக்காளர்களின் எண்ணத்திற்கு எதிர்மறையாக உள்ளதாகவும் கூறினார். வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.