முசிறி: மான் குறுக்கே வந்ததால் பைக்கிலிருந்து விழுந்தவர் பலி

முசிறி தாலுக்கா மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் இவர் துறையூர் தாலுக்கா எரகுடி பகுதியில் இயங்கி வரும் நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (மார்ச் 21) இரவு வேலை முடிந்து மங்களம் கிராமத்திற்கு செல்வதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது எரகுடி கரிகாலி சாலையில் கருங்குட்டை அருகே திடீரென காட்டு மான் குறுக்கே வந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

சம்பவம் குறித்து தாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன் மற்றும் போலீசார்கள் சம்பவ இடத்திற்கு சென்று தினேஷ் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி