திருச்சி மாநகரம் காஜாப்பேட்டை பகுதியில் கஞ்சா, போதை ஊசி, மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதாகவும் கூறி, போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காஜாப்பேட்டை பகுதி மக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.