சென்னையில் இருந்து திருச்சி வந்த சோழன் விரைவு ரயிலின் கழிவறையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.