முசிறி சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி

துறையூர் அருகே உள்ள முத்தையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் சம்பவம் நடந்த நேற்று தனது காரில் முசிறி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஜம்புநாதபுரம் அருகே மேலகொட்டம் பகுதியில் கார் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் அவர் காருக்குள் மயங்கிய நிலையில் கிடந்ததாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற ஜம்புநாதபுரம் போலீசார் அவரை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி