கிராம மக்கள் இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை மீண்டும் கட்டித்தருமாறு பலமுறை வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதையடுத்து இன்று (மார்ச் 24) காட்டுப்புத்தூரில் முசிறி முதல் காட்டுப்புத்தூர் வரை செல்லும் சாலையில் அமர்ந்து பொதுமக்கள், பெற்றோர்கள், பள்ளி மாணவ மாணவிகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காட்டுப்புத்தூர் போலீசார் பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்