ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களை ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். கூட்டத்தில் தமிழகத்தில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளும் வெற்றி பெற பாடுபட்ட தமிழ முதல்வர் மு. க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதன்மைச் செயலாளர் கே. என். நேரு, மாவட்ட செயலாளர், எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள கதிரவன் , ஸ்டாலின் குமார் ஆகியோருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது ஒன்றிய குழு உறுப்பினர் சசிகுமார் கல்லடிப்பட்டியில் போர்வெல் அமைத்து தர நான் கடிதம் கொடுத்து இருந்தேன் ஆனால் வேறு பணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆதனூர் உள்ளூர் சாலை 30 வருடங்களாக தார் சாலை அமைக்கப்படாமல் மண் சாலையாக உள்ளது அதை தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஒன்றிய குழு உறுப்பினர் ஏவூர் ஆறுமுகம் பேசும்போது கருப்பம்பட்டி மயான சாலை நீண்ட காலமாக போடப்படாமல் உள்ளது என கூறினார் இறுதியில் துணைத் தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்