திருச்சி மாவட்டம் முசிறியில் மத்திய அரசின் பட்ஜெட்டை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முசிறி நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் '2026 மத்திய பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது முட்டைதான்' என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.