திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்றத் தொகுதியில் இன்று நடைபெற்ற வார சந்தையில், அதிமுக வேட்பாளர் என். யோகநாதன் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, மாங்காய் மற்றும் பலா சுளைகளை வாங்கி, தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவருடன் வந்த நிர்வாகிகள், வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கோஷங்கள் எழுப்பினர்.