திருச்சியில் இப்தார்நோன்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழகத்தின் சார்பாக புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு "இப்தார் நோன்பு" திறக்கும் நிகழ்வு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் ஏற்பாட்டிலும் தலைமையிலும், முப்தி முஹம்மது, ரூஹூல் ஹக் ஹஜ்ரத் தலைவர் – திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் உளமா பெருமக்கள் ஜமத்தார்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு நோன்பு திறந்தனர். அதனைத் தொடர்ந்து அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் தொழுகையையும் நடத்தி முடித்து, புனித பெருநாளுக்கான வாழ்த்துக்களையும் இஸ்லாமிய பெருமக்களுக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமத், மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் இஸ்லாமிய பெருமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி